நியூஸ்

12 ஆம் வகுப்பு தேர்வில் 417 மதிப்பெண்கள் எடுத்த ,இரட்டையர்கள், ஒரே மாதிரி மதிப்பெண் எடுத்த அதிசயம்..!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளதுஇது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் சகோதர்கள் ஒரே மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.

திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் அக்நல் தம்பதியினர் இவர்களின் ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன் உள்ளனர் இவர்கள் இருவரும் இரட்டையர்கள்..
இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் இந்த இரட்டை சகோதரர்கள் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தேர்வு முடிவுகள் வெளியானது, இந்தநிலையில் நடந்த முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டை சகோதரர்கள் ரோகித் ரோஷன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டையர்கள் பிறவி அல்ல மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்கள் தன் எடுப்போம் என்று பிளஸ் டூ பொதுத் தேர்வில் இரட்டைப் பிறவியான இருவரும் சொல்லி வைத்தது போல 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பள்ளியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Back to top button