வீடியோஸ்

இப்படி ஒரு பொண்ணு மாப்பிள்ளை இனிமே பார்த்தது இல்ல,பா,பொண்ணு 31 இன்ச்,மாப்பிள்ளை 36 இன்ச் இணையத்தில் வைரலாகும் காதல் ஜோடியின் திருமணம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயரம் குறைவான ஜோடிக்கு நடைபெற்ற திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் நகரில் சந்தீப் மற்றும் உஜ்வாலா என்ற 2 பேருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் மணமகன் சந்தீப்பிற்கு உயரம் 36 அங்குலம், மணப்பெண் உஜ்வாலாவிற்கு உயரம் 31 அங்குலம்,இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே, நேற்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

உயரம் குறைவான இந்த ஸ்மார்ட் ஜோடியின் திருமணத்தை மண்டபத்தில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,சமூகவலைத்தளங்களில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Back to top button