நியூஸ்

மகள் ஆசையை நிறைவேற்றிய அப்பா பைலட், சிறுவயதில் ஆசைப்பட்ட மகளை பைலட் ஆக்கிய அப்பா ஒரே விமானத்தில் இருவரும் பைலட்..!

நெதர்லாந்தில் ஒரே விமானத்தை அப்பா- மகள் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது,நெதர்லாந்தின் ஹாக்ஸ்பெர்கன் பகுதியை சேர்ந்த பார்ட் வுட்மேன், விமான ஓட்டியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் லிசா வுட்மேன், ஒவ்வொரு பிள்ளைக்கும் தன்னுடைய தகப்பன் தான் முதல் ஹீரோ என்பதற்கேற்ப லிசாவுக்கு அவரது தந்தை தான் முதல் ஹீரோவாம்,சிறுவயதில் இருந்து தந்தை விமான ஓட்டி என பெருமிதம் கொண்ட லிசாவுக்கு, தானும் விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதற்காக விமானி போன்று சீருடை அணிந்து கொண்டு 2001ம் ஆண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்,அதோடு நிற்காமல் விமானத்தை இயக்க முறையாக பயிற்சியும் படித்துவிட்டாராம், தற்போது 23 வயதான லிசாவால் விமானத்தை இயக்க முடியும்.

தற்போது இரண்டாவது விமானியாக தந்தைக்கு அருகே அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்,கிட்டத்தட்ட 19 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் எடுக்கப்பட்ட இந்த இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Back to top button