ட்ரெண்டிங்

டாக்டர் ரூபத்தில் கடவுள் என்று சொல்லுவாங்க, இவர்தான் ,கடவுள், குழந்தைகளுக்கு இலவச ஆபரேசன் செய்த டாக்டர்..!

மேல் உதடு அன்னப்பிளவுடன் பிறந்த குழந்தைகளுக்கு இலவசமாக ஆப்ரேசன் செய்து சரி செய்துள்ளார் மருத்துவரான Dr Subodh Kumar Singh,சிறு வயதிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்து மருத்துவரான Dr Subodh Kumar Singh-ன் ஒரே குறிக்கோள் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதே.

ரயில்வேயில் வேலை செய்து வந்த Dr Subodh Kumar Singh-ன் தந்தை 1979ம் ஆண்டே இறந்துவிட சகோதரர்கள், தாயுடன் வசித்து வந்துள்ளார்,குடும்பம் மிகவும் ஏழ்மையில் கஷ்டப்பட, வீடு வீடாக சென்று சோப்பு விற்றுள்ளார் Dr Subodh Kumar Singh,தொடர்ந்து 1982ம் ஆண்டு, இவரது சகோதரருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்து விட குடும்பம் ஓரளவு வறுமையிலிருந்து மீண்டுள்ளது.

1983ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நுழைவுத்தேர்வை எழுதி தேர்வான Dr Subodh Kumar Singh மிகவும் கஷ்டப்பட்டு படித்துள்ளார்,அப்போதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை மனதில் உறுதியாக கொண்டுள்ளார்.

மருத்துவரானதும் 2002-ம் ஆண்டு தனது தந்தையின் நினைவு தினத்தன்று இலவசமாக ஆபரேசன் செய்யத் தொடங்கியுள்ளார்,2003ம் ஆண்டே உலகளவில் Smile Train என்ற அமைப்பை தொடங்கி, இலவச சிகிச்சையை தொடர்ந்துள்ளார்.

ஆண்டுதோறும் சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்து, 2008-09ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 4000 பேருக்கு இலவச சிகிச்சைகள் செய்யத் தொடங்கியுள்ளார்,மேல் அன்னப்பிளவுடன் என்னிடம் வரும் குழந்தைகளை பார்க்கும் போது, 13 வயதில் தந்தையை இழந்து பரிதவித்து நின்று என்னை பார்ப்பது போலவே இருக்கும் என கலங்குகிறார் Dr Subodh Kumar Singh.


ஆபரேசன் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்து விளக்குவதாகவும் தெரிவிக்கிறார்,இதுதவிர தீ வி.ப.த்.தி.ல் கா.யமு.ற்.ற நபர்களுக்கும் இலவசமாக ஆப்ரேசன் செய்து வருகிறாராம், இதுதொடர்பாக Dr Subodh Kumar Singh எடுத்துள்ள ஆவணப்படங்களும் சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button