நியூஸ்

400 ஆண்டு கால தஞ்சையில் உலகின் மிகப் பெரிய ,பீரங்கி, இந்த பீரங்கி நம்ம ஊருக்கு எப்படி வந்தது தெரியுமா வாங்க பார்க்கலாம்…!

இந்தியாவை அடிமைப் படுத்தியதில் ,அன்னியர்கள் கொண்டு வந்த பீரங்கி என்ற ராக்ஷச ஆயுதத்திற்குப் பெரும் பங்கு உண்டு,உலகில் இப்பொழுதுள்ள மிகப்பெரிய பீரங்கிகள் ஐந்து.அவை, சீனா,இங்கிலாந்து,ரஷ்யா,இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளன.

இந்தியாவில் உள்ளவை இரண்டு,ஒன்று ஜெய்பூர் ஜெய்கார் கோட்டையிலும் , இன்னொன்று தஞ்சையிலும் உள்ளன,இவற்றில் மிகப் பெரிய பீரங்கியாக கின்னசில் இடம் பிடித்து இருப்பது,சீனாவில் உள்ள ஹூலிஷன் பீரங்கி, ஜெர்மனில் 1896 ல் செய்யப்பட்டது,பீரங்கி எடையை தனியே கணக்கிட்டால் 25 டன்னுக்கு மிகாது.

இரண்டாவது இடத்தில ராஜஸ்தானில் ,உள்ள ஜெய்கார் கோட்டை ஜெய்வானா பீரங்கி.1720ல் செய்யப்பட்டது.இதன் மொத்த எடை 50 என்றாலும், பீரங்கி மட்டும் 25 டன்னுக்குள்தான் இருக்கும்,மூன்றாவது இடத்தில் உள்ளத்து,ரஷ்யாவின் ஜார் புஷ்கா பீரங்கி.கி.பி 1586ல் செய்யப்பட இதன் மொத்த எடை,42 டன் என்றாலும் பீரங்கி மட்டும் 25 டன்னுக்குள் தான் இருக்கும்.

லண்டனில் உள்ள டார்டனல் பீரங்கி நான்காவது இடத்தில. இது துருக்கியரால் 1453 ல்செய்யப்பட்டது,பீரங்கி வண்டியுடன் சேர்த்து 42 டன் என்று சொல்லப்பட்டாலும்,பீரங்கி எடை மட்டும் 20 டன்னுக்கு மிகாது,ஐந்தாவது இடத்தில நம் தஞ்சாவூர் ராஜகோபால பீரங்கி உள்ளது, இதையாவது ஒத்துக்கொண்டார்களே ,தஞ்சை கீழவாசல் பகுதியில் தாஸ் மேடு என்ற இடத்தில உள்ளது,தஞ்சை கோட்டையில் மிக உயரமான இடமும் இதுதான்.கல்லாலும் மண்ணாலும் உருவாக்கப்பட்ட இந்த மேடு 60 அடி உயரமிருக்கும்.

தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்கர் (கி.பி.1600-1635 ) காலத்தில் செய்யப்பட்டது.இம்மன்னனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி பெயர் இப் பீரங்கிக்கு இடப்பட்டதாகத் தெரிகிறது.பீரங்கி மட்டுமே உள்ளது.இதன் எடை 22 டன்,400 ஆண்டு கால தஞ்சையின் வரலாற்றோடு, வானமே கூரையாக மழை வெயிலையும் தாங்கிய இந்த பீரங்கி, துரும்பு பிடிக்காமல் இருப்பது ,தஞ்சை Blacksmith களின் திறமைக்கு சான்றாக உள்ளது.

Back to top button