நியூஸ்

ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில் 45-வது இடம், தமிழக அளவில் முதல் இடம் பிடித்த கோவை மாணவி சுவாதி ஸ்ரீ,குவியும் பாராட்டு மழை.!

ஐஏஎஸ்,எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளின் முடிவுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டுள்ளன..

இதில் முதல் மூன்று இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.

முதலிடத்தை: ஸ்ரீருதி ஷர்மா.

இரண்டாவது:இடத்தை அங்கீதா அகர்வால்.

மூன்றாவது இடத்தை:காமினி சிங்லா.

தமிழகத்தில் இருந்து கோவையைச் சேர்ந்த மாணவி சுவாதி ஸ்ரீ  இந்திய அளவில் 45வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

கோவையில் உள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை கே.தியாகராஜன் பிசினஸ் மேன். தாய் லட்சுமி பி.காம் பட்டதாரியான,இவர் ஊட்டி மற்றும் குன்னூர் தபால் துறையில் பணியாற்றி VRS வாங்கி ஓய்வு பெற்றுள்ளார்.

சுவாதி ஸ்ரீ தொடக்கக் கல்வியை ஊட்டியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை குன்னூரிலும் படித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள RVS அக்ரி கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்து முடித்திருக்கிறார்.

தொடர்ந்து 4 ஆண்டுகள் மிகவும் தீவிரமாக தயாராகி வந்துள்ளார். இரண்டாவது முறை தேர்வெழுதி பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

இருப்பினும் தனது கனவில் இருந்து பின் வாங்கவில்லை. தற்போது மூன்றாவது முறை தேர்வெழுதிய நிலையில் ஆக தேர்ச்சி பெற்று கனவை நனவாக்கிவிட்டார். குவியும் பாராட்டு மழை.!

 

Back to top button