ட்ரெண்டிங்

பழமையான பல கோயிலில் பார்த்திருப்பீங்க, கல்லிலே செதுக்கிய சங்கிலி வளையங்கள்,தற்போது அதே போல செய்து அசத்திய இளைஞர்.!

கல்லிலே சங்கிலி வளையங்கள்.

கல்லிலே வளையங்கள் செதுக்கியிருப்பதை பல கோயில்களில் கண்டிருப்போம். காஞ்சியில் இதைப் போன்ற சங்கிலிகளுண்டு.

தற்போது அதைப் போன்று செதுக்க யாராவது உண்டா என்றால் உண்டு, பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த அழகுநாச்சியம்மன்.

சிற்பக் கலைக் கூட, சிற்பி ஜி.கருப்பையா,48. இரண்டரை அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கல்லில், ஐந்து வளையங்கள் கல் சங்கிலிகளை செதுக்கியுள்ளார்.

இதற்கான காலம் இரண்டு மாதங்கள்.

தனது தாத்தா எழுதி வைத்துள்ள குறிப்புகளைக் கொண்டு செதுக்கியதாகவும் அடுத்த கட்டமாக யாழியின் வாய்க்குள் உருளும் கல்லை செதுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

தனது மகனுக்கும் இந்த நுட்பங்களை கற்றுக் கொடுத்து அவனையும் மேம்படுத்துவதே தனது லட்சியமென்றும் கூறியுள்ளார்.

கலைகள் அழிவதில்லை அது எங்காவது ஒளிந்திருக்கும் ,மீண்டும் மீட்டெடுப்பதே நமது பெருமை.🙏🏻🙏🏻

Back to top button