
உ ல கி லே யே மு த ன் மு த லா க த ங் க ஹோ ட் ட ல் ஒ ன் று திறக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது..
வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனாயில் திறக்கப்பட்டுள்ள அந்த ஹோட்டலுக்கு தி டால்ஸ் ஹனாய் கோல்டன் லேக் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 ஆண்டுகள் ஆகியிருக்கிறதாம் இந்த ஹோட்டலை கட்டி முடிப்பதற்கு. முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட முதல் ஹோட்டலும் இதுதான்!
25 மாடிகளில் 400 ரூம் வசதிகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்க 250 பவுண்டுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சதுரமீட்டர் ஒன்றுக்கு 5200 பவுண்ட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
உலகிலேயே முதன்முதலில் கட்டப்பட்டுள்ள இந்த தங்க ஹோட்டல் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.