வீடியோஸ்

மயிலின் முட்டையை எடுக்க வந்த நபருக்கு மயில் கொடுத்த தண்டனை வைரலாகும் வீடியோ…

மயிலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோகை விரித்து மயில் ஆடுவதைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும்.

அதிலும் மழை நேரங்களில் மயில் தோகை விரித்து ஆடுவதே மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்தியாவின் தேசிய பறவையாகவும் மயிலே இருக்கிறது. பொதுவாகவே நாம் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் உரியது என நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் பாசம், பிரிவு, இணையை பிரிவதில் உள்ள துயரம் ஆகியவை பறவை, விலங்குகளுக்கும் உண்டு. அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மயில் மழை வரும் முன்பே அதைத் தன் அழகுத் தோகையை விரித்து வரவேற்கத் தொடங்கிவிடும். இங்கேயும் ஒரு பெண் மயில் முட்டை போட்டு வைத்திருந்தது.

இதைப் பார்த்த நபர் ஒருவர் பெண் மயிலை துரத்திவிட்டு முட்டையை எடுக்க முயற்சித்தார். அப்போது இதைக் கவனித்த ஆண் மயில் அடுத்த நொடியில் எங்கோ இருந்து பறந்துவந்து முட்டையைத் தூக்கிய வாலிபரைத் தாக்கியது.

ஆண் மயிலின் திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத முட்டையைத் தூக்கியவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். குறித்த இந்தச் சம்பவம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

 

Back to top button