வீடியோஸ்

திக் திக் நிமிடங்கள்..100 அடி உயரத்தில் க த று ம் குழந்தையை ஒரு நொடிக்குள் காப்பாற்றிய மனிதன் ரூபத்தில் கடவுள்…!

கஜகஸ்தான் பகுதியை சேர்ந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து மூன்று வயது சிறுமியை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

100 அடி உயரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்த சிறுமியை காப்பாற்றியதை அடுத்து, அந்த நபர் ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

குழந்தையின் தாய் ஷாப்பிங் சென்று விட்டதை அடுத்து வீட்டில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமி குஷன்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகளை ஜன்னல் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென ஜன்னலுக்கு வெளியே வந்த குழந்தை, விரல் நுனியில் பிடித்துக் கொண்டு 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.

தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ஷோண்டக்பெவ் சபித்-ஐ நேரில் அழைத்து கஜகஸ்தான் அவசர நிலை அமைச்சகம் பாராட்டி அவருக்கு பதக்கம் வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

இதோடு இந்த சம்பவம் அடங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 👇👇

Back to top button