
அந்த காலத்துல சுண்ணாம்பால் கட்டிய வீடு 80 வருசமாச்சாம். துளி விரிசல் இல்லை. மின்விசிறி இல்லைனாலும் குளுகுளுனு இருக்குது.
முன்னாடி திண்ணையில் 20 – 30 பேர் தூங்கலாம். அந்த காலத்து மனுசங்க மனம் போல திண்ணை அவ்வளவு விலாசமா இருக்கு. வீட்டில் சின்ன விசேஷமே நடத்தலாம். ஊருக்கு போனா இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு வரலாம்.
வருமானம் குறைவா இருந்தாலும் அந்தக்கால வாழ்க்கைதான் அர்த்தமுள்ள வாழ்க்கை. இயற்கைக்கு கேடு விளைவிக்காம நிம்மதியா வாழ்ந்தாங்க.
ஆனா நாம விஞ்ஞான வளர்ச்சி அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொழில் வளர்ச்சிக்கு மிக அதிகபட்ச முக்கியத்துவம் கொடுத்து நீர் வளத்தையும் நிலவளத்தையும் பயங்கரமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்…!