நியூஸ்

ஊரடங்கு அமலில் உள்ள போது ,கொரோனா விதிமீறல் வழக்குகள் 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்ய உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு..

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தது.

அதன்படி மாஸ்க் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாதத், ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றியது என அரசின் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதை தொடர்ந்து அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய சென்னை தவிர பிற மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Back to top button