சினிமா

கண்களை மூடி உங்கள் பாவங்கள் தீர நீங்கள் நினைத்தது நிறைவேறும்..! உங்க குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.!

நமக்கு ஏதாவது மனத்துயரம் என்றால் உடனே கோவிலுக்கு சென்று விடுவோம்.

அங்கு சென்று இறைவனிடம் எனது குறை தீர வேண்டும், நான் இந்த வேண்டுதலை செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வோம்.

அவ்வாறு இறைவனுக்கு பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அங்கப்பிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் செய்வது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றோம்.

ஆனால் நாம் இவ்வளவு வேண்டுதல் வைத்தும், நாம் நினைத்தது நிறைவேற வில்லை என்றால் நமது மனதிற்கு மிகவும் வருத்தமாகி விடும்.

இதற்கு காரணம் நாம் செய்த கர்ம வினைகளாகவும் இருக்கலாம். இவற்றின் தாக்கம் குறைந்தால் மட்டுமே நமக்கு மன நிம்மதி கிடைக்கும்.

எனவே நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து உங்கள் பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மனிதனாகப் பிறந்தவன் தெரிந்தும், தெரியாமலும் பல தவறுகளை செய்து விடுகிறான் ஒவ்வொரு பாவத்திற்கும், புண்ணியத்திற்க்கும் அவரவர் பெயரில் கணக்கு வைப்பதுண்டு.

இதன் அடிப்படையில் தான் நமது வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களும், மகிழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

இவ்வாறு நமக்கு மன நிம்மதி இல்லாமல் இருந்தால் அதற்கு காரணமும் நாம் செய்த பாவமாக இருக்கலாம்.

எனது நமது பாவங்களில் தாக்கத்தை குறைத்தால் மட்டுமே நாம் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.

ஒரு சிலருக்கு திருமணம் தள்ளிப்போகும், சொத்து பிரச்சனை இருந்து கொண்டிருக்கும், அல்லது பண பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு எதை செய்தாலும் அதில் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

இவற்றில் இருந்து விலகுவதற்கான நாம் இறைவனிடம் பலமுறை பல வேண்டுதல்கள் செய்திருப்போம். இருந்தாலும் பலன் கிடைப்பதில்லை.

எனவே முதலில் நமது பாவத்திற்கான பரிகாரத்தைச் செய்து விட வேண்டும். இதனை முறையாக செய்து விட்டால் பிறகு நாம் நினைத்த அனைத்தும் விரைவாக நடந்து விடும்.

அதற்கு முதலில் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் ஒரு காலை அல்லது மாலை நேரத்தில் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

அதற்கு ஒரு வாழை இலை, பச்சை அரிசி, வெல்லம், நெய், விளக்கு திரி இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழை இலையை சுத்தமாக தண்ணீர் வைத்து அலசி கொண்டு, அதனை பூஜை அறையின் முன் வைக்க வேண்டும்.

பிறகு அதன் மீது இரண்டு கைப்பிடி பச்சை அரிசியை வைத்து விட வேண்டும். அதன்பின் அதற்கு மேலே சதுர வடிவிலான வெல்லக் கட்டியை வைக்க வேண்டும்.

அதன் மீது லேசாக விளக்கு ஏற்றுவதற்கு ஏற்றார்போல் துளை செய்து கொள்ள வேண்டும். பிறகு அதன் நடுவே நெய் ஊற்றி விளக்கு திரி போட்டுத் தீபம் ஏற்றவேண்டும்.

உங்களுக்கு திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சளில் மஞ்சள் கயிறு கட்டி அதனை பச்சை அரிசியின் மீது வைத்து விடவேண்டும்.

அல்லது நீண்ட நாள் தள்ளிப் போகும் சொத்து வழக்கு முடிவுக்கு வர வேண்டும் என்றால் ஒரு பேப்பரில் அதனைப்பற்றி எழுதி அரிசியின் மீது வைத்து விடவேண்டும்.

அல்லது பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் ஐந்து அல்லது ஒரு ரூபாய் நாணயத்தை வெல்லகட்டியின் அடியில் வைத்து விட வேண்டும்.

இவ்வாறு செய்து விட்டு கண்களை மூடி உங்கள் பாவங்கள் தீர, நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் உங்க குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மறுநாள் இந்த அரிசியின் வெல்லத்தை நன்றாக பிசைந்து வாயில்லாத ஜீவன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

Back to top button