ட்ரெண்டிங்

மதுரை மக்கள் என்னம்மா யோசிக்கிறாங்க பிரியாணி கடையில் இடம் பிடித்திருக்கும் ட்ரெண்டிங் வசனம் வைரலாக பரவி வருகிறது..!

முடியல தலைவரே…என்னமா யோசிக்கிறாங்க..என்று ரசிகர்கள் தங்கள் பங்குக்கு புலம்பி வருகிறார்கள்.

வைரலாகும் மீம்ஸ்

ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா.. அந்தப் படத்துல வர்ற சீன்களை, டயலாக்குகளை, மீம்ஸ் ஸா வைரல் பண்றதுதான் இப்ப ட்ரெண்டிங் ல இருக்கு.ஆனா நம்ம மதுரைக்காரங்க கொஞ்சம் வித்தியாசமான ஆளுங்க..

டயலாக்குகளையும், போட்டோக்களையும், போஸ்டர்ல வித்தியாசமாக கொண்டுவருவதில் அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை..!! என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் தற்பொழுது பிரியாணி கடை விளம்பரத்திற்காக மதுரைக்காரங்க அடித்துள்ள வால்போஸ்டர சமூக வலைதளங்களில் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

காலம் தொட்டு தொடரும் செயல்

இன்று நேற்று இல்லை.. எம்ஜிஆர்- சிவாஜி காலம் தொட்டு இன்றைய நடிகர்கள் வரை சுவர் விளம்பரத்தில் ஆரம்பித்து வால் போஸ்டர், பிளக்ஸ் போன்றவற்றில் திறமைகளை காட்டுவதில் மதுரைக்காரர்கள் செம மாஸ்..!

தத்ரூபமாக போட்டோக்கள் சுவற்றில் வரைவதிலும் நக்கலுடன் கூடிய விளம்பரங்கள் செய்வதற்கு யோசிப்பதும் தனித்திறமை பெற்றவர்கள் அவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் வால் போஸ்டர், பிளக்ஸ் போன்றவை பேசும் பொருட்களாக வலம் வந்திருந்தால் கண்டிப்பாக அது மதுரையைச் சார்ந்தவர்களின் கைவண்ணம் ஆகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு யோசிப்பதில் அனைவருக்கும் ஒரு படி மேல் இருப்பார்கள்.

எஸ். ஜே. சூர்யா டயலாக்

தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்களை அவர்கள் எப்படியாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ..! அதை கொஞ்சமும் அசராமல் எந்த சர்ச்சையை பற்றியும் கவலைப்படாமல் விளம்பரப்படுத்தி மதுரையை மட்டுமல்ல தமிழகத்தையே அதகள படுத்தி விடுவார்கள்.

அப்படிதான் தற்போது திரையரங்குகளில் சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தின் எஸ்.ஜே.சூர்யா போட்டோவையும் அவர் பேசிய டயலாக்குகளையும் ஒரு பிரியாணி கடை விளம்பரத்திற்காக வால்போஸ்டராக டிசைன் செய்துள்ளது நகைச்சுவையாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

பிரியாணி கடையில் நகைச்சுவை

மாநாடு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ். ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் அவர் அப்படத்தில் பயன்படுத்திய ‘வந்தான்..! சுட்டான்..! போனான்..!ரிப்பீட்டு..!..முடியல தலைவரே என்ற டயலாக்கை குமார் பேமஸ் பிரியாணி கடை என்ற கடை உரிமையாளர் தனது கடை விளம்பரத்திற்காக

எஸ்.ஜே.சூர்யா படத்துடன்  வந்தாங்க  சாப்பிட்டாங்க..! REP ‘eat U.. முடியல தலைவரே..”என்று மாற்றி வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளார் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்..

Back to top button