சினிமா

இந்த படத்தை நாங்க அப்பயே பார்த்துட்டோம் இப்ப ஏன்டா இத எடுத்தீங்க.. டான் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் விமர்சனம்…!

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி  விஜய் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தன் கனவை தேடி அலையும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை பற்றிய திரைப்படம் தான் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக நடித்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவுள்ளது.

அதிகாலை நான்கு மணி முதல் இப்படத்தின் காட்சி திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் திரையரங்கை திருவிழாவாக மாற்றியுளார்கள்.

மேலும் டான் படக்குழுவும் சிவகார்த்திகேயனும் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளனர்.

படத்தை பார்த்த அனைவரும் இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும்,
முதல் பாதி காமெடியாகவும் இரண்டாவது பாதி எமோஷ்னலாகவும் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இப்படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. என்னதான் படம் பொதுவான ரசிகர்களை வெகுவாக ஈர்த்தாலும் விமர்சகர்கள் சற்று கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

மேலும் சில ரசிகர்கள் இப்படம் விஜய்யின் நண்பன் படமும், விஜய் சேதுபதியின் 96 படமும் சேர்ந்த கலவைதான் என்று விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு குறைகள் இல்லாததால் இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button