நியூஸ்

கடல் வழியாக க ரை ஒ துங் கிய த ங் க தே ர் ஆந்திர மாநில கடற்கரையில் மர்மமான தங்க தேர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!

ஆந்திர மாநில கடற்கரையில் மர்மமான தேர் ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

வங்க கடலில் அசானி புயல் உருவாகி உள்ளதை அடுத்து கடல் கொந்தளித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்..

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் கடற்கரையில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று உடைந்து நொறுங்கிய நிலையில் கரை ஒதுங்கியது.

இந்த தேரை ஆய்வுசெய்த வரலாற்று ஆய்வாளர்கள் மியான்மர் அல்லது தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறினர்.

அசானி புயல் காரணமாக இந்த தேர் கடலில் மூழ்கி ஆந்திர கடற்கரையில் ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தேரை பார்ப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெருமளவு கூடியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Back to top button