நியூஸ்

புகழ்பெற்ற கால்பந்து வீரர் அவர் செய்த செயலைப் பாருங்கள் ஒரு நேர்காணலில் அவரைப் பற்றி ஒரு சின்ன கதை..!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” ( மே ற் கு ஆ பி ரி க்  கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்…

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போதுநீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்ட போது..

என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்க முடியும் ,ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும் நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன் ,என்னால் படிக்க முடியவில்லை..

எனக்கு காலணிகள் இல்லை, காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை..

ஆனால் இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன் அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்குறேன்..

Leave a Reply

Your email address will not be published.

Back to top button