நியூஸ்

கொம்பன் இறங்கிட்டான் இந்தியா கொம்பன்… WWE மிரட்டும் இந்திய கொம்பன்..! யார் இந்த கொம்பன்?

WWE உலகில் இந்தியரான வீர் மஹான் அசத்தி வருகிறார். இந்தியர்கள் WWE போட்டியில் சாதிப்பது அரிது என்றாலும் காளிக்கு பின் இவர் கவனம் பெற்றுள்ளார்.

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் மாலை நேரத்தை ஆக்கிரமித்த ஒரு ஷோ என்றால் அது கண்டிப்பாக WWE ஷோவாக மட்டுமே இருக்க முடியும். டேய் முடிஞ்சா எனக்கு ஸ்மேக் போடுடா..

ஸ்பியர் போடுடா என்று பள்ளிகளில் கூட விளையாட்டாக அடித்துக்கொள்ளும் அளவிற்கு WWE இந்தியர்களின் அங்கமாக இருந்து வருகிறது.

காலங்கள் மாறியனும்.. அண்டர்டேக்கர்.. ஜான் சீனா.. எட்ஜ்.. கேன்.. ரோமன் ரெய்ன்ஸ் என்று பல சூப்பர் ஸ்டார்கள் தொடர்ந்து வண்ணம்தான் இருக்கிறார்கள்.

புதிய சூப்பர் ஸ்டார்கள் வர வர புதிய பேன்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியர் காளி

இப்படிப்பட்ட பிரபலமான தொடரில் இந்தியர்கள் கலந்து கொண்டு சாதித்தது என்னவோ குறைவுதான்.

கிரேட் காளி இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட போது அதை உலகமே திரும்பி பார்த்தது.

7 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருக்கும் காளி ஒற்றை கையால் தலையில் அடித்து வெற்றிபெறுவது.

தலையை இரு ராட்சச கைகளால் பிடித்து அமுக்குவது என்று WWE உலகை கிரேட் காளி ஆட்டிப்பார்த்தார்.

வீர் மகான்.

இப்போது WWE போட்டிகளில் காளி பெரிதாக கலந்து கொள்ளாத நிலையில்தான் இந்தியரான வீர் மகான் இதில் அதிக கவனம் பெற்றுள்ளார்.

முகத்தில் பாதி மறைத்தபடி தாடி, நீளமான முடி, நெத்தி முழுக்க பட்டை என்று பார்க்கவே தெய்வீகமாக இருக்கும் இவர் ரிங்கில் இறங்கினால் டான்ஸ் ரோஸ் அல்ல வீறு கொண்ட வேம்புலி மாதிரி பொளந்து எடுக்க கூடியவர். கடந்த

யார் இவர்?

2018ல்தான் வீர் மஹான் WWE உலகிற்குள் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது இன்னொரு இந்தியரான சவுரவ் குஜ்ரார் உடன் அவர் இணைந்து ஆடினார்.

தி இண்டஸ் ஸ்டார் என்ற பெயரில் இவர்கள் சிறப்பாக ஆடி வந்தார்.

இவர்கள் இருவரும் 2020ல் WWE NXT குழுவிற்குள் சென்றனர். இங்கு இவர்களின் ஆட்டம் கவனிக்கப்பட்டது.

அதன்பின் வரிசையாக 10க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் இவர் வெற்றிபெற்றார். இதனால் 2021ல் இவரை WWE ரா ஒப்பந்தம் செய்தது.

லயன்

தன்னை தானே லயன் என்று அழைத்துக்கொள்ளும் வீர் மஹான் WWE ராவில் வரிசையாக வெற்றிகளை குவித்தார்.

முதல் போட்டியிலேயே ரே மிஸ்டேரியோவை வென்றுவிட்டு இவர் கொடுத்த ரியாக்சன் எல்லாம் காட்டுத்தனம்.

தற்போது ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர் போன்றவர்களுடன் வரும் நாட்களில் இவர் மோத இருக்கிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் ரிங்கு சிங்.

பின்னணி

இவர் கிரிக்கெட், பேஸ் பால் போன்ற போட்டிகளில் சிறப்பாக ஆட கூடியவர்.

இங்கே உத்தர பிரதேசத்தில் கிரிக்கெட் ஆடியவர்..

மில்லியன் டாலர் ஆர்ம் என்ற J.B. Bernstein என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து இரண்டு பேஸ்பால் வீரர்களை தேர்வு செய்ய போட்டி நடக்கும்.

அதில் தேர்வான இரண்டு இந்தியர்களில் இவரும் ஒருவர்.

இன்னொருவர் தினேஷ் பட்டேல். அமெரிக்கா பேஸ்பால் அணிக்காக ஆடிய முதல் இந்தியர்கள் இவர்கள்தான்.

Back to top button