ஆரோக்கியம்

இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் வரவில்லையா.. அப்ப இதை செய்தால் போதும் நிம்மதியான தூக்கம் கண்டிப்பாக வரும்..!!

தினமும் சாப்பாட்டிற்குப்பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரணசக்தி உண்டாகும், இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். மேலும் வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லையும் கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காயைப் பாலில் அரைத்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொதிக்க வைத்து, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

அதிகளவு இரும்புச்சத்தை கொண்டுள்ள வெண்டைக்காயை உண்பதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது.

இடுப்புச்சதை குறைய அன்னாசிப்பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து, வேகவைத்து வடிகட்டிக் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

சிறிய வெங்காயம் நான்கு எடுத்து தோலை உரித்து நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் எத்தகைய காய்ச்சலும் நீங்கும்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

எலுமிச்சைப் பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து வந்தால் பற்கள் வெண்மையான நிறத்தை பெறும்.

அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் உடல் வலிகளும், கை கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.

மணத்தக்காளிக் கீரை சாற்றை பால் அல்லது இளநீருடன் சேர்த்துப் பருகி வந்தால், நாள்பட்ட தோல் வியாதிகள் குணமாகும்.

வெங்காயத்தை சிறிதாக வெட்டி தயிரில் போட்டு, இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.
சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறியப்பின் குளித்தால் முடி உதிர்வது நின்றுவிடும்.

ஓமத்தை லேசாக வறுத்து, அத்துடன் அரை பங்கு உப்பும், அரைக்கால் பங்கு வெல்லமும் சேர்த்து சிறு உருண்டையாக செய்து சாப்பிட்டு வந்தால் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்கு படுக்கப்போகும்முன் அரைத்தேக்கரண்டி தேன் கொடுத்தால், நன்றாக தூங்குவார்கள்.

அருகம்புல் சாற்றை அடிக்கடி பருகிவந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

தினமும் ஒருதுண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும், மலமும் நன்றாக வெளியேறும்.

இரவில் படுக்கும்முன் சிறிதளவு விளக்கெண்ணெயை கண் இமைகளில் தடவி வந்தால் கண்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button