நியூஸ்

வாட்டி வதைக்கும் வெயில்..! வெயில் காரணமாக காலை 6 மணிக்கு பள்ளிகள் வகுப்புகள் ஆரம்பம்.. மாணவர்கள் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தார்..!

கோடை காலம் துவங்கியுள்ளதால் பல மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்த கொடூர வெயிலால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து வருகிறது.இதனை சமாளிக்க முடியாத மக்கள் குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

இதனால் ரோடுகளில் குளிர்பான கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் மருத்துவர்கள் மக்களை இயற்கை குளிர்பானங்களை அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வெயில் வெப்பத்தினால் பள்ளிக்குழந்தைகளும் பாதிக்கப்படுவதால் ,ஒடிசா அரசு பள்ளிகளை விடிகாலை 6 மணிக்கே திறக்க உத்தரவிட்டது.அதன்படி இன்று காலை 6 மணிக்கு பள்ளிகள் திறந்து மாணவர்கள் பள்ளிக்கூடம் வந்தனர்.

மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல் நடைபெறும் என ஒடிசா பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒடிசா அரசின் இந்த முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்களின் இன்னலை புரிந்துகொண்ட நடவடிக்கை எடுத்தமைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Back to top button