நியூஸ்

மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அவர் வசித்து பத்மாவதி சாலை விவேக் நினைவாக பேர் மாற்றம்..!! சின்னக்கலைவாணர் விவேக் சாலை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவரது வீடு அமைந்த தெருவுக்கு தனது கணவரின் பெயரை வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நடிகர் விவேக் 17 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழ் சமூகத்திற்கு தனது பங்களிப்பை அதிகளவில் கொடுத்துள்ள விவேக், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை மட்டும் நிறைவேற்றாமல் விட்டு விட்டார்.

சமீபத்தில் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவரது வீடு அமைந்த தெருவுக்கு தனது கணவரின் பெயரை வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அந்த சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என தமிழக அரசு பெயரிட்டுள்ளது.

மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசளித்த அங்கீகாரம் குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

விவேக்கின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும் பொருட்டு, ஒரு கோடி மரக்கன்றை எட்டுவதற்காக பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

நடிகர் விவேக் நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி பிரபலம், பின்னணி பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர்.

கே பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விவேக், தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button