ட்ரெண்டிங்

பூனைக்கு வளைகாப்பு,கர்ப்பிணியாக இருக்கும் பூனைக்கு வளைகாப்பு கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்..!!

கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

வீட்டில் அவர்கள் 2 பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களது 2 பெண் பூனைகளும் கருவுற்றது. பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Back to top button