நியூஸ்

யானைகள் ஒரு காட்டையே உருவாக்குமாம்..!! பலருக்கும் தெரிந்திடாத உண்மை..!!யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை.!!

யானைகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த நிலத்தில் வாழும் விலங்குகள் ஆகும்.

யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன.

யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை.

இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது.

தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது.

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும், இது 5 கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது.

விலங்குகளில் குரங்குகளுக்கு, டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அதிகளவு அறிவாற்றல் நிரம்பியவையாகக் உள்ளது.

யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன.

5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.

ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்கும் சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.

இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணரும் தன்மை கொண்டது.

மேலும் வியக்கவைக்கும் தகவல்கள்

யானைகள் 22 மாதங்கள் கருவை சுமக்கும்.

யானைகள் 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.

அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.

ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும்.

ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.

யானைகள் ஒரு நாளைக்கு 300 – 500 விதைகள் விதைக்கும்.

யானைகள் ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்களை நடுகிறது.

ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது.

இனிமேல் யானையை பார்க்கும் பொழுது நீங்கள் பயப்படாமல் அவை இயற்கைக்கு ஆற்றும் பங்கை நினைத்து பார்க்க வேண்டும்.

அப்போது தான் காடுகளும், இயற்கை வளங்களும் செழிப்பாக இருக்க இந்த உயிரினங்கள் எவ்வளவு பங்காற்றுகின்றன என்பது நமக்கு தெரியும்.

Back to top button