வாழ்க்கையில் சாதிக்க உடல் சவால்கள் ஒரு தடையல்ல என்பதற்கு வாழும் உதாரணமாக இந்த இரட்டையர்கள் திகழ்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பெற்றோரால் கைவிடப்பட்ட, ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த 18 வயதான சோஹ்னா, மோஹ்னா ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் பிறந்ததும் இவர்களது பெற்றோர்கள் இவர்களை கைவிட்டு சென்றுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் பிரித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் அவர்களை அப்படியே வளர மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட இருவரும் படிப்பில் கவனம் செலுத்தி, ஐடிஐ முடித்து மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.
ஐடிஐ படிப்பில் மின்சாரத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளனர். தங்களுக்கு உதவிய அரசுக்கும், தொண்டு நிறுவனத்திற்கும் சோஹ்னா, மோஹ்னா சகோதரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் சாதிக்க உடல் சவால்கள் ஒரு தடையல்ல என்பதற்கு வாழும் உதாரணமாக இந்த இரட்டையர்கள் திகழ்கின்றனர்.