வீடியோஸ்

ஆக்ரோஷத்தோடு சாலையில் வந்த யானை கையெடுத்து கும்பிட்டு வணங்கிய நபர் வைரலாகும் வீடியோ..!

யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம் ஆனால் என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும் குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.

கையெடுத்து கும்பிட்டு வணங்கிய நபர்இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் ஒரு காட்டு யானை ஆக்ரோஷமாக சாலையில் வரவே அங்கிருந்த வாகன ஓட்டிகள் அப்படியே நின்று விட்டனர் சிலர் காட்டு யானைப் பார்த்து தெறித்து ஓடினர் ஒருவர் தைரியத்தோடு யானை முன்பு சென்றார் யானையை கையெடுத்து கும்பிட்டு சாமி இந்த பக்கம் வராதீங்க அப்படியே நகர்ந்து உள்ளே போயிடுங்க என்று தரையில் விழுந்து வணங்கினார்.

ஆனால், யானை ஒரு நிமிடம் ஆக்ரோஷத்தோடு கத்தி அப்படியே நின்றது. இவர் கையெடுத்து கும்பிட அந்த யானையும் யாரையும் ஒன்று செய்யாமல் அப்படியே பின்னால் நகர்கிறது தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஓம்  விநாயகா போற்றி என்று கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் அந்த நபரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Back to top button