
தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார் இந்நிலையில் தேர்வு முடிவுகள் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி பயன்பாடு பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார் மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வருகிறார்.
மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால். தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்து தற்போது அதிக மதிப்பெண் பெறுவதற்கு அனைவரும் ஊக்குமளித்ததாகவும் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.