
உலகம் முழுக்கவே திரைப்படங்களையும் தாண்டி அதில் நடித்திருக்கும் கலைஞர்களைக் கொண்டாடும் மனசு ரசிகர்களுக்கு அதிகம் தங்கள் அபிமான நடிக நடிகையர்களின் திரைப்படங்கல் ரிலீஸாகும் போதெல்லாம் ஆர்வமாக பார்க்க துடிக்கும் ரசிகர்களால் தான் திரைக்கலைஞர்களின் வயிறும் மனசும் நிறைகிறது.
அதிலும், இந்திய ரசிகர்களின் கலைத்தாகம் அளவில்லாதது இன்னும் அதைச் சுருக்க வேண்டுமானால் ரசிகர்களில் உச்சம் என்பது தென்னிந்திய ரசிகர்கள் தான் அவர்களின் கொண்டாட்டங்களுக்கு உலகில் வேறு எங்குமே ஒப்பீடாக கருத முடியாது முதன்முதலா நடிகைக்கு கோயில் கட்டியது யாரு நம்ம பயலுக தான் என்று கெத்தாக சொல்லலாம்.
நடிகைகள் குஷ்பு நமீதா ஹன்சிகா வரிசையில் இப்போது தனது கனவு நாயகி சமந்தாவுக்கு தன்னுடைய வீட்டிலேயே கோயில் கட்டி வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் இந்திய திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை சமந்தா.
இவருக்கு தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் அதிலும் இந்திய ரசிகர்கள் மிகவும் ரசனை கொண்டவர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டும் பழக்கத்தை முதலில் தொடங்கியது நம்ம இந்தியர்கள் தான் ஏற்கனவே குஷ்பூ நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டியுள்ளனர் அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் கோவில் கட்டி வருகின்றனர்.
ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் இவர் நடிகை சமந்தாவுக்காக கட்டி வரும் கோவிலை இன்று திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார் அந்த பகுதியில் இருப்பவர்கள் இப்போதே ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்ல தொண்டு செய்வதிலும் மிகவும் கவர்ந்துள்ளார் சமந்தா பிரதிக்ஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருகிறது இதனை அறிந்ததும் சமந்தா மீது மேலும் மதிப்பும் மரியாதையும் அதிகமானது இதனால் அவருக்கு கோவில் கட்ட நான் தீர்மானித்தேன்.